சென்னையில் 72 மணி நேரம் பட்டினி போராட்டம்- சத்துணவு சங்க ஊழியர்கள் மாநாட்டில் தீர்மானம்


சென்னையில் 72 மணி நேரம் பட்டினி போராட்டம்- சத்துணவு சங்க ஊழியர்கள் மாநாட்டில் தீர்மானம்
x

சென்னையில் 72 மணி நேரம் பட்டினி போராட்டம் நடத்தவது தொடர்பாக சத்துணவு சங்க ஊழியர்கள் மாநாட்டில் தீர்மானம் முடிவு செய்யப்பட்டது

மதுரை


மதுரை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது. மதுரை, தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட தலைவர்கள் தலைமை தாங்கினர். மாநில துணை தலைவர் பேயத்தேவன் தொடக்க உரை நிகழ்த்தினார். முன்னாள் மாநில துணைத்தலைவர் விஜயகுமார், மாநில செயலாளர் ஜெஸ்ஸி, மாநில செயலாளர் பாண்டிசெல்வி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா நிறைவுரை ஆற்றினார். கூட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் காலிப்பணியிடங்கள் 40 ஆயிரத்திற்கும் மேலாக உள்ளதால் ஒரு அமைப்பாளர் 3 மையங்களை கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் நிலை உள்ளது. எனவே காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காலை சிற்றுண்டியை, சத்துணவு திட்டத்துடன் இணைத்திட வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 26-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை சென்னையில் 72 மணி நேர பட்டினிப் போராட்டம் நடத்துவது என மாநில செயற்குழுவின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story