வேலூர் ஜெயிலில் 72 போலீசார் திடீர் சோதனை


வேலூர் ஜெயிலில் 72 போலீசார் திடீர் சோதனை
x

வேலூர் ஜெயிலில் செல்போன் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகிறதா என 72 போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் ஜெயிலில் செல்போன் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகிறதா என 72 போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் ஜெயிலில் திடீர் சோதனை

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில், பெண்கள் ஜெயில் உள்ளது. இங்கு தண்டனை, விசாரணை கைதிகளாக 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயில் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா, பீடி, சிகரெட் மற்றும் செல்போன் போன்றவைகள் உள்ளதா? என ஜெயில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி, அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். எனினும் கைதிகள் ரகசியமாக அவற்றை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரஜினி, கருணாகரன் மற்றும் 72 போலீசார் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் திடீரென சோதனை நடத்தினர்.

2 மணி நேரம் நடந்தது

முதலில் கைதிகளை தீவிரமாக சோதனை செய்து, அறைகளில் இருந்து வெளியே அனுப்பி விட்டு, அவர்களின் அறைகள் மற்றும் கழிவறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஜெயில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். குறிப்பாக போலீசாரின் உயர் கண்காணிப்பு கோபுரங்களுக்கு அடிப்பகுதி மற்றும் பொது கழிவறை, குளியலறையில் சோதனை செய்யப்பட்டது.

போலீசாருடன் ஜெயில் காவலர்கள் 30 பேரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். பெண்கள் ஜெயிலிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் மத்திய ஜெயிலில் பரபரப்பு ஏற் பட்டது.


Next Story