725 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் வாலிபர் கைது
திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் 725 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் வாலிபர் கைது
விழுப்புரம்
திருவெண்ணெய்நல்லூர்
விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீஸ்காரர் மோகன்தாஸ் திருவெண்ணெய்நல்லூர் பகுதி சிறுமதுரை பஸ் நிறுத்தம் அருகில் தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது அவரிடம் இருந்த பையில் அரசால் தடை செய்யப்பட்ட 725 புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் வீரணாம்பட்டு கிராமத்தை சேர்ந்த மகாதேவன் மகன் அசோக்(வயது 28) என்பதும், புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story