728 கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்


728 கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 1 Jun 2022 12:59 AM IST (Updated: 1 Jun 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 728 கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 728 கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் விழா சிவகங்கையில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையிலும், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் தலைவர் பொன்.குமார் முன்னிலையில் நடைபெற்றது விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் நலதிட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 37ஆயிரத்தி 139 கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 28 ஆயிரத்து 401 தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 13 ஆயிரத்து 402 பதிவு பெற்ற அமைப்புச்சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.5,86,59,600 மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை

தற்போது 270 தொழிலாளா்களின் பிள்ளைகள் படிப்பிற்காக ரூ.2 லட்சத்து 75ஆயிரம் கல்வி உதவித்தொகையும், ஒருவருக்கு மதிப்பீட்டில் இயற்கை மரணத்தொகையாக ரூ.55,ஆயிரமும், ஒருவருக்கு விபத்து மரண உதவித் தொகையாக ரூ. 1 லட்சத்து 5 ஆயிரமும், 15 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகையும், 440 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் சேர்த்து மொத்தம் 728 தொழிலாளர்களுக்கு ரூ.12 லட்சத்து 5 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

விழாவில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, தொழிலாளர் இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகரசபை தலைவர் துரைஆனந்த், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் கோட்டீஸ்வரி, ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story