மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 73 பேர் கைது


மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 73 பேர் கைது
x

மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 73 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேப்பூர், ஆலத்தூர் ஒன்றிய குழு சார்பில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம், மக்களை பிளவுபடுத்தல், இந்தி திணிப்பு, ஊழல் ஆகியவற்றை கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள், பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்பட 46 ஆண்கள், 27 பெண்கள் உள்பட மொத்தம் 73 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story