திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு புதிதாக 73 பேர் பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு புதிதாக 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் கடந்த 4 வாரமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதற்கு பொதுமக்களின் அலட்சியமே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். நேற்று முன்தினம் 664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரம் 72 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தற்போது 665 பேர் மருத்துவமனைகளிலும், தங்கள் வீடுகளிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று கொரோனாவுக்கு யாரும் இறக்கவில்லை.
Related Tags :
Next Story