நகைக்கடை அதிபர் குடும்பத்துக்கு ரூ.75 லட்சம் நஷ்ட ஈடு
நகைக்கடை அதிபர் குடும்பத்துக்கு ரூ.75 லட்சம் நஷ்ட ஈடு
திருப்பூர்
கோவை தாமஸ் வீதியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 47). இவருடைய மனைவி சைலா (45). இவர்கள் கோவையில் நகைக்கடை வைத்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 9-11-2018 அன்று புகழேந்தி தனது மனைவியுடன் காரில் போத்தனூர் செட்டிப்பாளையம் அருகே சென்றார். அப்போது டிப்பர் லாரி மோதிய விபத்தில் புகழேந்தி இறந்தார். சைலா காயமடைந்தார்.
புகழேந்தியின் இறப்புக்கு ரூ.1 கோடியே 75 லட்சமும், சைலாவின் காயத்துக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு கேட்டு நியூ இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தின் மீது திருப்பூர் சிறப்பு மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. புகழேந்தியின் இழப்புக்கு ரூ.75 லட்சமும், சைலாவுக்கு ரூ.2¼ லட்சமும் இழப்பீடு வழங்க நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். மனுதாரர் தரப்பில் வக்கீல் தங்கராஜூம், நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தரப்பில் வக்கீல் மாணிக்கராஜூம் ஆஜரானார்கள்.