2-வது நாள் உண்டியல் காணிக்கையில் ரூ.75 லட்சம் வருவாய்


2-வது நாள் உண்டியல் காணிக்கையில் ரூ.75 லட்சம் வருவாய்
x

பழனி முருகன் கோவிலில், 2-வது நாள் உண்டியல் காணிக்கையில் ரூ.75 லட்சம் வருவாய் கிடைத்தது.

திண்டுக்கல்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இவ்வாறு பழனிக்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அவை கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் நடந்தது. முதல் நாள் எண்ணிக்கையில், ரூ.2 கோடியே 16 லட்சத்து 86 ஆயிரத்து 240 கிடைத்தது. அதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.75 லட்சத்து 40 ஆயிரத்து 75 ரூபாய், தங்கம் 177 கிராம் வெள்ளி 1,933 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 361-ம் கிடைத்தது.


Next Story