ரூ.75 லட்சத்தில் சுகாதார வளாகங்கள்


ரூ.75 லட்சத்தில் சுகாதார வளாகங்கள்
x
தினத்தந்தி 11 July 2023 1:00 AM IST (Updated: 11 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திண்டுக்கல் முத்தழகுப்பட்டி, மருதாணிக்குளம், சவேரியார்பாளையம் ஆகிய இடங்களில் ரூ.74 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

திண்டுக்கல்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திண்டுக்கல் முத்தழகுப்பட்டி, மருதாணிக்குளம், சவேரியார்பாளையம் ஆகிய இடங்களில் ரூ.74 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாநகராட்சி மேயர் இளமதி தலைமை தாங்கினார். துணைமேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய சுகாதார வளாகங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், சுகாதாரத்தை மேம்படுத்தி மக்கள் ஆரோக்கியமாக வாழ பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தொற்றுநோய்கள் பரவலை தடுத்தல், மண் மற்றும் நிலத்தடிநீர் பாதுகாப்பு கருதி அனைத்து பகுதிகளிலும் கழிப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றார். விழாவில் 24-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் ஸ்டெல்லாமேரி, தி.மு.க. மாநகர பொருளாளர் சரவணன், வார்டு செயலாளர் மார்ட்டின் சகாயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story