ரெயில் மறியலுக்கு முயன்ற ம.தி.மு.க.வினர் 75 பேர் கைது


ரெயில் மறியலுக்கு முயன்ற ம.தி.மு.க.வினர் 75 பேர் கைது
x

ரெயில் மறியலுக்கு முயன்ற ம.தி.மு.க.வினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல கோரி ம.தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார். அதன்படி கட்சியின் மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் தலைமையில் நகர செயலாளர் முத்துபாண்டி, ஒன்றிய செயலாளர் துரைராஜ் முன்னிலையில் ம.தி.மு.க.வினர் பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக ரெயில்நிலையம் நோக்கி சென்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து போலீசாருக்கும், ம.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதமாகி தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு பால்வண்ணன், மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தும் ரெயில்வே அதிகாரிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆதலால் திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 3 பெண்கள் உள்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story