மினிவேனில் கடத்தி வந்த 766 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


மினிவேனில் கடத்தி வந்த 766 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

சாத்துமதுரையில் மினிவேனில் கடத்தி வந்த 766 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

வேலூரை அடுத்த சாத்துமதுரை சாலையில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர் வனிதாவிற்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர், ஏட்டு பாலமுருகன், போலீஸ்காரர் வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த மினிவேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 766 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. ரேஷன் அரிசியை கடத்தி வந்த ஊசூர் கோவிந்த ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கவுதம் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story