வாணியம்பாடியில் 790 பேர் நீட் தேர்வு எழுதினர்


வாணியம்பாடியில் 790 பேர் நீட் தேர்வு எழுதினர்
x

நீட் தேர்வு நேற்று நடந்தது. வாணியம்பாடியில் 790 பேர் எழுதினர்.

திருப்பத்தூர்

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் தேர்வு நடந்தது. இதில் வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த 816 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீட் தேர்வு எழுதுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து காலை 9 மணிக்கு தேர்வு நடைபெறும் மையத்திற்கு மாணவ, மாணவிகள் வர ஆரம்பித்தனர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மொத்தம் 790 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். 26 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.


Next Story