பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கடவூர் வட்டம், தேவர்மலை பகுதியில் சிந்தாமணிப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக அருளரசன், மூர்த்தி, பழனிச்சாமி, முத்துசாமி, சரத்குமார், அபுதாஹிர், சதாசிவம், இதயத்துல்லா ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.24 ஆயிரத்து 600 மற்றும் லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story