நீலகிரியில் ரூ.8¼ கோடிக்கு மது விற்பனை


நீலகிரியில் ரூ.8¼ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி நீலகிரியில் ரூ.8¼ கோடிக்கு மது விற்பனையானது.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களை கட்டியது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர். குறிப்பாக கடந்த 3 நாட்களில் விற்பனை அதிகமாக நடந்தது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் ரூ.1 கோடிக்கு மேல் மது விற்பனை ஆகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 22-ந் தேதி ரூ.2 கோடியே 30 லட்சம், 23-ந் தேதி ரூ.3 கோடியே 25 லட்சம், தீபாவளியான நேற்று முன்தினம் ரூ.2 கோடியே 70 லட்சம் என 3 நாட்களில் ரூ.8 கோடியே 15 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகமாக விற்பனையாகியுள்ளது. மேலும் பீர் வகைகளை விட பிராந்தி மற்றும் ரம் வகைகள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story