ரூ.8 லட்சத்து 78 ஆயிரம் உண்டியல் வருவாய்


ரூ.8 லட்சத்து 78 ஆயிரம் உண்டியல் வருவாய்
x

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில், ரூ.8 லட்சத்து 78 ஆயிரம் உண்டியல் வருவாய் கிடைத்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பொதுவாக மாசித்திருவிழாவுக்கு முன்னதாக கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில், கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

மொத்தம் 11 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதன் மூலம் ரூ.8 லட்சத்து 78 ஆயிரத்து 743, தங்கம் 143 கிராம், 304 கிராம் வெள்ளி ஆகியவை வருவாயாக கிடைத்தது.


Next Story