வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 8 பேர் கைது


வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 8 பேர் கைது
x

மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் மேலும் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெட்டிக்கொலை

மயிலாடுதுறையில் வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த 17-ந்தேதி நள்ளிரவு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 22 பேர்மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து 13 பேரை கைது செய்து சிறையில் அடைந்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரை வலைவீசி தேடிவந்தனர்.கொலையாளிகள் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை வீசிவிட்டு சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

8 பேர் கைது

இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த கார்த்தி (வயது 24), மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் (27), கலைஞர் நகரை சேர்ந்த சந்துரு (25), திவாகர் (23), துரை (21), மாதவன் (23), சந்திரன் (27), மகாதேவன் (26) ஆகிய 8 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story