வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 8 பேர் கைது


தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சேவன் மகன் ராஜேஷ்குமார் (வயது 28). இவர் தூத்துக்குடி தெர்மல்நகர் பகுதியில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 23-ந் தேதி தெர்மல்நகர் ரெயில் தண்டவாளம் அருகில் வந்து கொண்டிருந்தபோது, அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் ராஜேஷ்குமாரை வழிமறித்து அவருடைய செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 17 வயது சிறுவர்கள் 2 பேர், 19 வயது வாலிபர்கள் 6 பேர் ஆக மொத்தம் 8 பேர் சேர்ந்து செல்போனை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போன் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவர்கள் 2 பேரும் நெல்லை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.


Next Story