வீட்டில் சூதாடிய 8 பேர் கைது
சிவகிரியில் வீட்டில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி
சிவகிரி:
சிவகிரியை சேர்ந்த குருசாமி என்பவரின் வீட்டில் சூதாட்டம் நடப்பதாக சிவகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது தவமணி (வயது 57), மணிகண்டன் (33), கோவிந்தராஜ் (44), தாமோதரன் (62), சங்கர் (43), கோவிந்தராஜ் (37), செம்புலிங்கம் (60), விவேகானந்தன் (40) ஆகிய 8 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.63 ஆயிரத்து 320 மற்றும் பிளாஸ்டிக் சேர், மேஜை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story