மது விற்ற 8 பேர் கைது


மது விற்ற 8 பேர் கைது
x

மது விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இதில், வேலாயுதம்பாளையம், தென்னிலை, கரூர், வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்டபாணி (வயது 58), பாலச்சந்திரன் (55), கதிர்வேல் (53), சண்முகம் (48), பெரியசாமி (53), மோகன் (28), முத்துசாமி (50), சத்தியசீலன் (28) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 104 மது பாட்டில்கள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story