மதுபானம் விற்ற 8 பேர் கைது
மதுபானம் விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடி தாலுகா போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை நடத்தினர். அதில் அவர்கள் வைத்திருந்த பையில் 13 மதுபான பாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம், துரைராஜபுரம் காலனி பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 39), சிவசக்தி (40) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதேபோல், கூடலூர் வடக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது காமாட்சியம்மன் கோவில் தெரு பகுதியில் 1-வது வார்டு மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரன் (56), கம்பம் கோம்பை ரோடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 84 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வீரபாண்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மதுபானம் விற்ற வீரபாண்டியை சேர்ந்த மாரிசாமி (28), போடேந்திரபுரத்தை சேர்ந்த மாசிலாமணி (38), தப்புக்குண்டுவை சேர்ந்த சிவக்குமார் (50), கோட்டூரை சேர்ந்த குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 27 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் புகையிலை பொருட்கள் விற்றதாக அழகுராஜா, சிவசாமி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.