திண்டுக்கல்லில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஆஜராகாத 8 பேர் கைது


திண்டுக்கல்லில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஆஜராகாத 8 பேர் கைது
x

திண்டுக்கல்லில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஆஜராகாத 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நல்லாம்பட்டி, பாறைப்பட்டி, கொட்டப்பட்டி, பித்தளைபட்டி ஆகிய பகுதிகளில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் குற்றவாளிகள் இருந்தனர். அவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நீதிபதி பிரியா உத்தரவிட்டார்.

அதன் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் நேற்று தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் நல்லாம்பட்டியை சேர்ந்த பூபால கார்த்திக் (வயது 25), மாரி (35), அசோக் (25), சரவணன் (40), கண்ணன் (38), பித்தளைபட்டியை சேர்ந்த குணசேகரன் (49), கொட்டப்பட்டியை சேர்ந்த வடிவேல் (60), பாறைப்பட்டியை சேர்ந்த ராஜராஜன் (30) ஆகிய 8 பேர் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும் தாலுகா போலீசார் கைது செய்தனர்.


Next Story