மது, கள் விற்ற 8 பேர் பிடிபட்டனர்-குட்கா கடத்திய வாலிபர் கைது
மது, கள் விற்ற 8 பேர் பிடிபட்டனர். குட்கா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கெங்கவல்லி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கள் விற்பனை செய்த பெரியசாமி, சவுந்திரராஜன், கதிர்வேல், வெங்கடேசன், ராஜேந்திரன், மூர்த்தி, வேலு ஆகிய 7 பேர் போலீசில் சிக்கினர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் ஆணைப்பட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் மூட்டையுடன் சென்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தெற்கு மனக்காட்டை சேர்ந்த அருள்முருகன் (வயது 25) என்பதும், குட்காவை மூட்டையில் அடைத்து கடத்தி சென்றதும் தெரியவந்தது. மேலும் அவருடைய தோட்டத்தில் இருந்து 3 மூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அருள்முருகனை போலீசார் கைது செய்தனர்.
கொளத்தூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ரோந்து சென்ற போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. இதுதொடர்பாக பிள்ளை (70) என்பவரை போலீசார் கைது செய்து, 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.