வீட்டில் புகுந்து பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு


வீட்டில் புகுந்து பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
x

வீட்டில் புகுந்து பெண்ணிடம் 8 பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளை வலசை மெயின் ரோட்டு பகுதியைச் சேர்ந்தவர் பீர்முகம்மது. இவருடைய மனைவி காதர்பீவி (வயது 65). சம்பவத்தன்று அதிகாலையில் அருகில் இருக்கும் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக பீர்முகம்மது சென்றார். காதர்பீவி வீட்டின் பின்புறத்தில் பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, மர்ம நபர் வீட்டின் பின்புறம் மாடிப்படி வழியாக வந்து திடீரென்று காதர்பீவியின் கழுத்தில் கயிற்றால் இறுக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போடவே கழுத்தில் இருந்த கயிற்றை எடுத்து காதர்பீவியின் வாயில் வைத்து அமுக்கினார்.

பின்னர் அவர் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் அறுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த பீர்முகம்மதுவிடம் சம்பவம் குறித்து காதர்பீவி கூறினார். இதுதொடர்பாக செங்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் தீவிர விசாரணை நடத்தி, மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்.


Related Tags :
Next Story