8 வனச்சரகர்கள் இடமாற்றம்
சேலம்
சேலம் மாவட்டத்தில் 8 வனச்சரகர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரகர் முரளிதரன், ஓசூருக்கு மாற்றப்பட்டு உள்ளார். சேர்வராயன் வடக்கு வனச்சரகர் பரசு ராமமூர்த்தி தர்மபுரி நவீன நாற்றங்கால் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதே போன்று வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன், சேர்வராயன் தெற்கு சரகத்திற்கும், ஏற்காடு வனச்சரகர் பழனிவேல் சேர்வராயன் வடக்கு சரகத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளார். பென்னாகரம் வனச்சரகர் முருகன் ஏற்காட்டிற்கும் மாற்றப்பட்டு உள்ளார். திருச்சி மாவட்டத்தில் இருந்து மாற்றப்பட்ட வனச்சரகர்கள் மாதேஸ்வரன், வாழப்பாடிக்கும், முருகேசன் தம்மம்பட்டிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். தர்மபுரி நவீன நாற்றங்கால் பிரிவு வனச்சரகர் புவியரசன், கல்வராயன் வனச்சரகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.
Next Story