ஆட்டோ மீது லாரி மோதி 8 மாணவர்கள் படுகாயம்


ஆட்டோ மீது லாரி மோதி 8 மாணவர்கள் படுகாயம்
x

ஆம்பூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் இருந்து 8 பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு ஒரு ஆட்டோ இன்று ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை ராஜசேகரன் என்பவர் ஓட்டினார்.

சான்றோர்குப்பம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது பெட்ரோல் நிரப்பிக்கொண்டு ஒரு லாரி தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் திரும்பியது.

அப்போது எதிர்பாராத விதமாக லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ மீதும் மோதியது. இதில் ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் ராஜசேகரன், 8 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். சாலையில் கவிழ்ந்த ஆட்டோவால் ஆம்பூர் -வாணியம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து ஆட்டோவை அப்புறப்படுத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் எந்தவித காயமின்றி உயிர் தப்பினார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story