8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்


8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
x

சேலம் மாநகரில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம் மாநகரில் நேற்று 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது வெளி மாவட்டங்களில் இருந்து மாறுதலாகி சேலம் மாநகரில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் மோகன்பாபு சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கும், இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரராஜன் செவ்வாய்பேட்டைக்கும், செல்வராஜ் கன்னங்குறிச்சிக்கும், சசிகலா இரும்பாலைக்கும், விக்னேஸ்வரன் கருப்பூருக்கும், விஜயேந்திரன் அழகாபுரத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் சம்பங்கி சேலம் டவுன் குற்றப்பிரிவுக்கும், கன்னங்குறிச்சியில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், அன்னதானப்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பிறப்பித்துள்ளார். இதுதவிர, சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகிய 2 பேரும் வெளி மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story