அதிக கனிம வளங்கள் ஏற்றி வந்த 8 லாரிகளுக்கு அபராதம்
செங்கோட்டை அருகே அதிக கனிம வளங்கள் ஏற்றி வந்த 8 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தென்காசி
செங்கோட்டை:
தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களில் அதிக பாரங்கள் ஏற்றி செல்வதை கண்டறிந்து உடனடி அபராதம் விதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் போலீசார் செங்கோட்டை அருகே பிரானூர் பார்டரில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது கேரளாவுக்கு கனிமளங்கள் ஏற்றி வரிசையாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அளவுக்கு அதிகமாக கனிமவளங்கள் பாரம் ஏற்றி வந்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அதிக பாரம் ஏற்றி வந்த 8 லாரிகளுக்கு ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 550 அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story