பா.ஜ.க.வினர் 80 பேர் கைது
ஆ.ராசாவுக்கு கருப்பு கொடி காட்ட திரண்ட பா.ஜ.க.வினர் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்,
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நேற்று கூடலூருக்கு வந்தார். இந்தநிலையில் ஆ.ராசாவை கண்டித்து ராஜகோபாலபுரத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து பா.ஜ.க.வினர் கருப்பு கொடி காட்ட திரண்டனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அனைவரும் கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து கருப்பு கொடி காட்ட முயன்ற பா.ஜ.க.வினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக ஆ.ராசா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஊட்டிக்கு வந்தார். ஆ.ராசாவை கண்டித்து ஊட்டி ஏ.டி.சி. திடலில் பா.ஜ.க.வினர் கருப்பு கொடி கட்டியும், வாயில் கருப்பு துணி கட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர். ஊட்டி, குன்னூரில் 80 பேரை கைது செய்தனர்.