80 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் முகாம்


80 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் முகாம்
x

வேலூரில் 80 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் முகாம்

வேலூர்

கலவரம், மோதல்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும்போது மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தேர்தல் பணியிலும் அவர்களின் பங்கு முக்கியமானதாகிறது. இந்தநிலையில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் (சிறப்பு பிரிவு) 80 பேர் கொண்ட குழுவினர் வேலூர் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் வேலூர் மாவட்டம் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும்போது கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் இந்த குழுவினர் ஈடுபடுவார்கள். வேலூர் மாவட்டத்தின் அடிப்படை தகவல்கள், புவியியல் அமைப்புகள் உள்ளிட்டவை அவர்களின் பாதுகாப்பு பணிக்கு தெரிந்திருக்க வேண்டும். அதன்அடிப்படையில் வேலூர் மாவட்டத்தின் தகவல்களை அறிய வேலூரில் முகாமிட்டுள்ளனர். இதேபோன்று கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் தங்கி பணியை முடித்துள்ளனர் என்றனர்.


Next Story