81 கிலோ புகையிலை பறிமுதல்


81 கிலோ புகையிலை பறிமுதல்
x

81 கிலோ புகையிலை பறிமுதல்

தஞ்சாவூர்

கபிஸ்தலம்

சுவாமிமலையில் சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட 81 கிலோ புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஒரு வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீவிர வாகன தணிக்கை

சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று சுவாமிமலை கடைத்தெரு பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் 18 சாக்கு மூட்டையில் 81 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரியவந்தது. பின்னர் சரக்கு ஆட்டோவில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

கைது, சரக்கு ஆட்டோ பறிமுதல்

விசாரணையில் அவர் அரியலூர் மாவட்டம் இருகையூர் வேணாநல்லூர் கீழத்தெருவை சேர்ந்த கொளஞ்சிநாதன்(வயது 38) என்பதும், அவர் சரக்கு ஆட்டோவில் புகையிலை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொளஞ்சிநாதனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 81 கிலோ புகையிலை மற்றும் சரக்கு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக புகையிலை நிறுவனத்தின் மேலாளர் ஜவகர் பாட்சா, உரிமையாளர் கலீம் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story