81 வயது முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
81 வயது முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
தக்கலை:
தக்கலை அருகே உள்ள மணலி மாவடி வளாகத்தில் வசித்து வந்தவர் வேலாயுதம் (வயது 81). இவர் தனியாக வசித்து வந்தார். இவருடைய சகோதரியின் மகள் கீதா (64) வேலாயுதத்தை கவனித்தார்.இந்தநிலையில் வேலாயுதத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவரை கீதா ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது சகோதரர்கள் வந்து வேலாயுதத்தை பார்க்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனவருத்தத்தில் இருந்த அவர் வீட்டிற்கு வந்த பிறகு சரியாக உணவு சாப்பிடாமலும், யாரிடமும் பேசாமலும் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று காலையில் அவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து கீதா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.