சிங்கம்புணரி பேரூராட்சியில் 83 கடைகள் ஏலம் விடப்பட்டன
சிங்கம்புணரி பேரூராட்சியில் 83 கடைகள் ஏலம் விடப்பட்டன
சிங்கம்புணரி
சிங்கம்புணரி தேர்வு நிலை பேரூராட்சிக்கு கட்டுப்பட்ட பஸ் நிலைய உள் கடைகள், அலுவலக வணிக வளாக கடைகள், சிறுவர் பூங்கா கடைகள், அம்மா தினசரி சந்தை கடைகள் என மொத்தம் 83 கடைகளுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பொது ஏலம் அறிவிப்பு செய்யப்பட்டு வணிகர்கள் ஏலம் எடுத்து கடைகளை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொது ஏலம் முறையாக அறிவிக்கப்பட்டு 83 கடைகளுக்கும் நேற்று சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து பொது ஏலம் விடப்பட்டது. சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) தனுஷ்கோடி தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் அழகர்சாமி, ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து செயல் அலுவலர் தனுஷ்கோடி கூறுகையில், அமைதியான முறையில் நடைபெற்ற பொது ஏலத்தில் ஏலம் எடுத்தவர்கள் 9 ஆண்டுகளுக்கு கடைகளை பயன்படுத்திக் கொள்ளவும் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் உரிய வரி உயர்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.