தீபாவளியன்று சாலை விதிகளை மீறியதாக 868 வழக்குகள் பதிவு


தீபாவளியன்று சாலை விதிகளை மீறியதாக 868 வழக்குகள் பதிவு
x

தீபாவளி அன்று சாலை விதிகளை மீறியதாக 868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

தீபாவளி அன்று சாலை விதிகளை மீறியதாக 868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாலை விதி மீறல்

நெல்லை மாவட்டத்தில் தீபாவளியன்று குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சாலை விதிகளை மீறியதாக மாவட்டத்தில் 493 வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 75 வழக்குகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 47 வழக்கு, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாகவும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதும் அடங்கும். மேலும் 241 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

நெல்லை மாநகரம்

நெல்லை மாநகர பகுதிகளில் கமிஷனர் அவினாஷ்குமார், துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சாலை விதிகளை மீறியதாக மொத்தம் 375 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் மாநகர கிழக்கு பகுதியில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 7 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் வந்ததாக 44 வழக்குகளும் உள்பட 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதே போல் மாநகர மேற்கு பகுதியில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 19 வழக்குகள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 2, மது போதையில் வாகனம் ஓட்டியதாக 2, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 107 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 27 வழக்குகள் உள்பட 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

மாநகர பகுதிகளில் தீபாவளியன்று சாலை விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.72 ஆயிரத்து 300 அபராதமாக வசூல் செய்யப்பட்டது.


Next Story