அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி 87 சதவீதம் தேர்ச்சி
அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி 87 சதவீதம் தேர்ச்சி
வெள்ளகோவில்
வெள்ளகோவில் பகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் வருமாறு:-
2021- 22 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி நேற்று வெளியிடப்பட்டது. இதில் வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 129 பேர் தேர்வு எழுதினர். இதில் 113 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 87 சதவீதம் தேர்ச்சி ஆகும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 106 பேர் தேர்வு எழுதினர். இதில் 70 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், மொத்தம் தேர்ச்சி 66 சதவீதம் ஆகும்.
வெள்ளகோவில் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 48 பேர் தேர்வு எழுதினர். இதில் 33 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், மொத்த தேர்ச்சி 69 சதவீதம் ஆகும்.
ஓலப்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 34 பேர் தேர்வு எழுதினர். இதில் 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி 94 சதவீதம் ஆகும்.
இலக்கமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் மொத்தம் 24 பேர் தேர்வு எழுதினர். இதில் 20 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், மொத்த தேர்ச்சி 83 சதவீதம் ஆகும்.
உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 101 பேர் தேர்வு எழுதினர். இதில் 97 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்ச்சி 96 சதவீதம் ஆகும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 67 பேர் தேர்வு எழுதினர். இதில் 59 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி 88 சதவீதம் ஆகும்.
புதுப்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பொது தேர்வில் மொத்தம் 37பேர் தேர்வு எழுதினர். இதில் 36 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், மொத்தம் தேர்ச்சி 97 சதவீதம் ஆகும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 39 பேர் தேர்வு எழுதினர். இதில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்ச்சி 87 சதவீதம் ஆகும்.
அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களை பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
----
Reporter : R. Selvaraj Location : Tirupur - Dharapuram - Vellakoil