871 மனுக்களுக்கு உடனடி தீர்வு
தரங்கம்பாடியில் நடந்த ஜமாபந்தியில் 871 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
பொறையாறு;
தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள வருவாய் கிராமம் சார்பில் பொதுமக்களிடம், பட்டா பெயர் மாற்றம், பெயர் திருத்தம், வீட்டுமனை பட்டாகோருதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மாற்றுத் திறனாளி உதவித்தொகை, உள்பட மொத்தம் ஆயிரத்து 170 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 871 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. கலெக்டா் மகாபாரதி ரூ.25 லட்சத்து18ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இயக்குளர் சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நரேந்திரன் (பொது), ஜெயபாலன் (வேளாண்மை), கலெக்டர் அலுவலக தாசில்தார்கள் முருகேசன், முருகானந்தம், தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், தரங்கம்பாடி தாலுகா மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், செயல் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.