10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
88.95 சதவீதம் தேர்ச்சி
தமிழகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 501 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 637 மாணவர்களும், 15 ஆயிரத்து 799 மாணவிகளும் என 32 ஆயிரத்து 436 பேர் எழுதினர்.
இதில் 14 ஆயிரத்து 97 மாணவர்களும், 14 ஆயிரத்து 755 மாணவிகளும் என 28 ஆயிரத்து 852 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 88.95 ஆகும்.
இந்த தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் 30-வது இடத்தை பிடித்து உள்ளது.
கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்தில் 7-வது இடத்தில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் பினதங்கி 30-வது இடத்தை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
100 சதவீதம் தேர்ச்சி
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் படி மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதனால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களின் தேர்வு முடிவுகளை காண மிகவும் ஆர்வமாக இணைதளத்தில் பார்வையிட்டனர்.
மேலும் மாணவ, மாணவிகள் ஹால் டிக்கெட் பெறும் போது கொடுத்த செல்போன் எண்ணிற்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் வெளியானது.
மேலும் 501 பள்ளிகளில் 100 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த 100 பள்ளிகளில் 28 பள்ளிகள் அரசு பள்ளிகளாகும்.