மணல் திருட்டில் ஈடுபட்ட 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணல் திருட்டில் ஈடுபட்ட 9 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
வடகாடு அருகே சிலர் மாட்டு வண்டிகளில் மணல் திருடுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குரும்பிவயல் அக்னி ஆற்று பகுதிகளில் இருந்து 9 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து, 9 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story