9 மின்மோட்டார்கள் பறிமுதல்
நெல்லையில் 9 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவை சேர்ந்த உதவி செயற்பொறியாளர் லெனின், இளநிலை பொறியாளர் ஜெயகணபதி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 1-வது வார்டு தச்சநல்லூர் பகுதி சத்திரம் புதுகுளத்தில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 9 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story