கட்டுமான நிறுவனத்தில் ரூ.9 லட்சம் மோசடி


கட்டுமான நிறுவனத்தில் ரூ.9 லட்சம் மோசடி
x

கடலூர் கட்டுமான நிறுவனத்தில் ரூ.9 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர்

கடலூர் செம்மண்டலம் வரதராஜன்நகரை சேர்ந்தவர் மணிவாசகம் மகன் அய்யப்பன் (வயது 35). இவர் பீச்ரோட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனத்திற்கு விழுப்புரம் மாவட்டம் வளவனூர் எறையூர் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் முனுசாமி என்பவர் கிரானைட் கல் வினியோகம் செய்து வந்தார். இந்நிலையில் அய்யப்பன், முனுசாமியிடம் புதுச்சேரி வில்லியனூர் கமலேஸ்வரன் கோவில் சீரமைப்பு பணிக்காக 88 லட்சத்து 84 ஆயிரத்து 500 ரூபாயை கடந்த 2018-ம் ஆண்டு கொடுத்ததாக தெரிகிறது.

வழக்குப்பதிவு

ஆனால் அதில் ரூ.79 லட்சத்து 63 ஆயிரத்து 497 -க்கு வேலையை முடித்து விட்டதாகவும், மீதி பணம் ரூ.9 லட்சத்து 21 ஆயிரத்து 3 பணத்தை திருப்பி கேட்டும், அந்த பணத்திற்கு வேறு வேலையை முடித்து தருமாறு கேட்டும், முனுசாமி செய்யவில்லை. மேலும் நிறுவனத்தில் இருந்த லெட்டர் பேடை வைத்து, நிறுவனத்திற்கு எதிராக மோசடி செய்தது தெரியவந்தது. இது பற்றி அய்யப்பன் கடலூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், முனுசாமி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் முனுசாமி மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story