நாகர்கோவிலில் விடுதியில் வியாபாரியை தாக்கிய 9 பேர் கைது
நாகர்கோவிலில் விடுதியில் வியாபாரியை தாக்கிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் விடுதியில் வியாபாரியை தாக்கிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
வியாபாரி மீது தாக்குதல்
கடியபட்டணம் பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 54). இவர் மீன் மற்றும் காய்கறிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும், மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (25), கார்த்திக் (38), சுரேஷ் (33), ஜாபர் அலி (35), ஆசாரிபள்ளம் அனந்தன்பாலம் பகுதியைச் சேர்ந்த விவேக் (26), பள்ளவிளை பெருவிளை பகுதியைச் சேர்ந்த ஜான் (26), புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அனீஷ் (28), ராணித்தோட்டம் டாக்டர் தோட்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (33), கார்த்திக் (29) ஆகிய 9 பேருக்கும் இடையே வியாபார ரீதியாக பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் ஜெயபால் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று அறை எடுத்து தங்கியிருந்தார். அதே ஓட்டலில் அந்த 9 பேரும் தங்கியிருந்தனர். பின்னர் அவர்கள் ஜெயபாலை அவருடைய அறையில் இருந்து கடத்தி தாங்கள் தங்கியிருந்த அறையில் வைத்து அவரை சரமாரியாக தாக்கி தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ஜெயபால் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் வடசேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர்.