கீரனூர் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 9 பேர் கைது


கீரனூர் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 9 பேர் கைது
x

கீரனூர் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 12 மோட்டார் சைக்கிள்கள், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை

சேவல் சண்டை

கீரனூர் அருகே உள்ள பிரகதாம்பாள் பெரிய குளம் பகுதியில் சிலர் சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கீரனூர் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்டதும் சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் போலீசார் 9 பேரை மடக்கி பிடித்தனர்.

9 பேர் கைது

விசாரணையில் அவர்கள் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் (வயது 45), நார்த்தாமலையை சேர்ந்த அர்ஜுனன் (25), இலுப்பூரை சேர்ந்த சோபன்பாபு (24), திருமயத்தை சேர்ந்த விஜய் (24), தொண்டைமான் நல்லூரை சேர்ந்த தனபால் (28), பரமசிவம் (26), திருவப்பூரை சேர்ந்த இதயத்துல்லா (31), புதுக்கோட்டைைய சேர்ந்த அமிஜித்கான் (32), மாத்தூரை சேர்ந்த பிரகாஷ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடியவர்கள் விட்டுச்சென்ற 12 மோட்டார் சைக்கிள்கள், 9 செல்போன்கள், 4 சேவல்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story