பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
விக்கிரவாண்டி
பெரியதச்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் தலைமையில் போலீசார் விக்கிரவாண்டி அருகே உள்ள செ.கொத்தமங்கலம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கொத்தமங்கலத்தை சேர்ந்த ராஜா(வயது 35), ராஜசேகர்(45), ராஜி(43), திருமுருகன்(32), தனஞ்செழியன்(46), சங்கர்(35) ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.100-ஐ பறிமுதல் செய்தனர்.
அதேபோல் திருவெண்ணெய்ல்லூர் அருகே உள்ள அரசு ஏரியில் பணம் வைத்து சூதாடிய அரசூர் பாரதி நகரை சேர்ந்த சிங்காரம் மகன் குமார்(42), பழனி மகன் பிரகாஷ்(30), இருவேல்பட்டு கிராமம் ராமமூர்த்தி மகன் குப்பன்(43) ஆகிய 3 பேரை திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story