மது விற்ற 9 பேர் கைது
மது விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தும்பிவாடி பகுதியை சேர்ந்த அரங்கநாதன் (வயது 61), பள்ளபாளையத்தை சேர்ந்த வெள்ளையத்தேவன் (62), திருவாடுதுறையை சேர்ந்த பிரேம் குமார் (26), பால்ராஜபுரத்தை சேர்ந்த சண்முகவேல் (51), உடையாபட்டியை சேர்ந்த தங்கதுரை (49) ஆகிய 5 பேரும் பல்வேறு இடங்களில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 37 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டி, வாளாந்தூர், கருங்களாப்பள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் ஈச்சம்பட்டி பகுதியில் இனாம் கரூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (42), வாளாந்தூர் பகுதியை ேசர்ந்த சுந்தர்ராஜ் (55), கருங்களாபள்ளியில்யை ேசர்ந்த ஆகாஷ் (21) ஆகிய 3 பேரும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 5 மதுபாட்டில்கள் வீதம் மொத்தம் 15 மதுபாட்டில்கள் பறிமுதல் ெசய்யப்பட்டன.
இதேேபால் நொய்யல் அருகே மரவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (44) என்பவா் மது விற்று ெகாண்டிருந்தார். இதையடுத்து அவரை ேவலாயுதம்பாளையம் ேபாலீசார் ைகது ெசய்தனா். ேமலும் அவா் விற்பனைக்காக ைவத்திருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் ெசய்யப்பட்டன.