9 விசைப்படகுகளில் இருந்த மீன்கள் விற்பனை


9 விசைப்படகுகளில் இருந்த மீன்கள் விற்பனை
x

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் நிறத்தப்பட்டிருந்த 9 விசைப்படகுகளில் இருந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

புதுக்கடை:

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் நிறத்தப்பட்டிருந்த 9 விசைப்படகுகளில் இருந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சேதமடைந்த முகத்துவாரம்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அரசின் உத்தரவை தொடர்ந்து கடந்த சில தினங்களாக படகுகளில் தேங்கி நின்ற மீன்களை மீனவர்கள் ஏலம் மூலம் விற்பனை செய்ய தொடங்கினர்.

தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு தூத்தூர் மற்றும் இனயம் மண்டலத்தைச் சேர்ந்த 1100 விசைப்படகு மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடிப்பதற்கு வசதியாக துறைமுகம் கட்டப்பட்டது.

ஆனால், துறைமுகம் சரியான கட்டமைப்புடன் அமைக்கப்படாததால் முகத்துவார பகுதிகளில் படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

துறைமுகம் மூடப்பட்டது

கடந்த சில நாட்களுக்கு முன்பு இனயம் புத்தன்துறையை சேர்ந்த அமல்ராஜ் என்ற மீனவர் வள்ளத்தில் சென்று மீன்பிடித்து விட்டு திரும்பியபோது, படகு கவிழ்ந்து பலியானார். இதையடுத்து மீனவர்கள் இறந்த அமல்ராஜின் உடலை பிரோத பரிசோதனைக்கு கொடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சீரமைப்பு பணி தொடங்கும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என கோரிக்கையை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று துறைமுகத்தை மூட அரசு உத்தரவிட்டது.

ஆனால், கடலுக்குள் சென்ற 9 விசைப்படகுகள் மீன்களுடன் துறைமுகத்துக்கு திரும்பின. அந்த படகுகளில் இருந்து மீன்கள் இறக்க முடியாமல் துறைமுக பகுதியில் நிறத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த படகுகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான மீன்கள் உள்ளதாகவும், அவற்றை இறக்கி விற்பனை செய்ய வேண்டும் என்று தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் அரசிடம் அனுமதி கோரினர்.

விற்பனைக்கு அனுமதி

அதைதொடர்ந்து நடந்த மீனவர்கள் மேலாண்மை கூட்டத்தில் படகுகளில் தேங்கி இருக்கும் மீன்களை விற்க அனுமதி தர வேண்டும் என்று மீனவர்கள் அனைவரும் ஒருமித்து கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 9 படகுகளில் உள்ள மீன்களை இறக்கி விற்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதைதொடர்ந்து நேற்று காலை முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் இருந்து மீன்களை இறக்கி ஏலமிடப்பட்டது. ஆனால், நாட்கள் ஆனதால் மீன்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story