அம்மன் கோவில் சுற்றுலாவுக்கு செல்ல ரூ.900 கட்டணம்


அம்மன் கோவில் சுற்றுலாவுக்கு செல்ல ரூ.900 கட்டணம்
x

மதுரையில் உள்ள அம்மன் கோவில் சுற்றுலாவுக்கு செல்ல ரூ.900 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மதுரை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து பக்தர்கள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மதுரையில் இந்த ஒரு நாள் சுற்றுலா திட்டத்தின் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், வண்டியூர் காளியம்மன் கோவில், மடப்புரம் வெட்டுடையார் காளியம்மன் கோவில், விட்டனேரி முத்து மாரியம்மன் கோவில், தாயமங்கலம் ராக்காயி அம்மன் கோவில், அழகர் கோவில் ஆகியவற்றுக்கு செல்லலாம். இந்த சுற்றுலா காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இருக்கும். இந்த ஆன்மிக சுற்றுலா, மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஓட்டல் தமிழ்நாட்டில் இருந்து தொடங்குகிறது. இந்த சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களிலும் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.900 ஆகும்.

இந்த சுற்றுலா செல்ல விரும்புவர்கள் www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பான விவரங்களுக்கு 9176995841, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது.


Related Tags :
Next Story