பிளஸ்-2 பொதுத் தேர்வில் 90.61 சதவீதம் மாணவ -மாணவிகள் தேர்ச்சி


பிளஸ்-2 பொதுத் தேர்வில் 90.61 சதவீதம் மாணவ -மாணவிகள் தேர்ச்சி
x

பிளஸ்-2 பொதுத் தேர்வில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 90.61 சதவீதம் மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராணிப்பேட்டை


தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 7526 மாணவர்கள் எழுதினர். அதில் 6215 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 82.58 சதவீதமாகும். மாணவிகள் 7536 பேர் தேர்வு எழுதினர். அதில் 6930 பேர் தேர்ச்சி பெற்றனர். ஏதி 91.96 சதவீதம் ஆகும்.

ஆக மொத்தம் 15 ஆயிரத்து 62 பேர் தேர்வு எழுதியதில், 13 ஆயிரத்து 145 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.27 சதவீதமாகும்.

அதேப்போல் பிளஸ்- 2 பொதுத்தேர்வை 6488 மாணவர்கள் எழுதினர். அவர்களில் 5617 தேர்ச்சி பெற்றனர். இது 86.58 சதவீதம் ஆகும். 6905 மாணவிகள் தேர்வு எழுதியதில், 6519 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.41 சதவீதமாகும். ஆக மொத்தம் 13 ஆயிரத்து 393 பேர் தேர்வு எழுதியதில் 12 ஆயிரத்து 136 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90.61 சதவீதமாகும்.


Next Story