909 மதுபாட்டில்கள் பறிமுதல்
909 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர்
விருதுநகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சைக்கிள் நிறுத்துமிடம் அருகில் 909 மது பாட்டில்கள் அனுமதியின்றி விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 170 என கூறப்படுகிறது. மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரிபுரத்தை சேர்ந்த சிவசக்தி முருகன் (47) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில் சிவசக்தி முருகனை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story