பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.58 சதவீதம் பேர் தேர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 50 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
91.58 சதவீதம் பேர் தேர்ச்சி
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 175 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் 8 ஆயிரத்து 606 பேரும், 9 ஆயிரத்து 969 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 575 பேர் எழுதியிருந்தனர்.
இதில் 7 ஆயிரத்து 519 மாணவர்களும், 9 ஆயிரத்து 492 மாணவிகளும் என 17 ஆயிரத்து 11 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 91.58 சதவீதமாகும். இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். மாணவர்கள் 87.37 சதவீதமும், மாணவிகள் 95.22 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.

கல்வி மாவட்டங்கள்
மாவட்டத்தில் உள்ள 3 கல்வி மாவட்டங்களில் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 196 மாணவ-மாணவிகளில் 5 ஆயிரத்து 770 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.12 ஆகும். புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 200 மாணவ-மாணவிகளில் 6 ஆயிரத்து 604 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.72 ஆகும்.
இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 179 மாணவ-மாணவிகளில் 4 ஆயிரத்து 637 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 89.53 ஆகும். தேர்வு முடிவுகள் வெளியானதும் இணையதளத்திலும், தங்களது செல்போனிலும் மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அந்தந்த பள்ளிகளில் தேர்வு முடிவுகள் வெளியே அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டன. இதனை மாணவ-மாணவிகள் பார்வையிட்டும் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்டனர். புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு முடிவுகள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்ததை மாணவிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.
மாவட்டத்தில் 107 அரசு பள்ளிகளில் 8 பள்ளிகளும், 18 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 பள்ளிகளும், 3 சுயநிதி பள்ளிகளில் 2 பள்ளிகளும், 47 மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 37 பள்ளிகளும் என 50 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. கடந்த கல்வியாண்டில் கொரோனா காரணமாக 100 சதவீதம் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சியாக இருந்தது.
தேர்வு முடிவுகள் வெளியிடும் முறை
பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் கடந்த 2017-ம் ஆண்டு மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், முதல் இடம், 2-ம் இடம், 3-ம் இடம் என அறிவிக்கப்படுவதில்லை. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அவர்களுக்கு தனித்தனியாக செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் இணையதளத்திலும் பார்த்துக்கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலிலும் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் உள்ள 3 கல்வி மாவட்டங்களில் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 196 மாணவ-மாணவிகளில் 5 ஆயிரத்து 770 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.12 ஆகும். புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 200 மாணவ-மாணவிகளில் 6 ஆயிரத்து 604 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.72 ஆகும்.
இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 179 மாணவ-மாணவிகளில் 4 ஆயிரத்து 637 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 89.53 ஆகும். தேர்வு முடிவுகள் வெளியானதும் இணையதளத்திலும், தங்களது செல்போனிலும் மாணவ-மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அந்தந்த பள்ளிகளில் தேர்வு முடிவுகள் வெளியே அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டன. இதனை மாணவ-மாணவிகள் பார்வையிட்டும் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொண்டனர். புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு முடிவுகள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்ததை மாணவிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.
மாவட்டத்தில் 107 அரசு பள்ளிகளில் 8 பள்ளிகளும், 18 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 பள்ளிகளும், 3 சுயநிதி பள்ளிகளில் 2 பள்ளிகளும், 47 மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 37 பள்ளிகளும் என 50 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. கடந்த கல்வியாண்டில் கொரோனா காரணமாக 100 சதவீதம் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சியாக இருந்தது.
தேர்வு முடிவுகள் வெளியிடும் முறை
பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் கடந்த 2017-ம் ஆண்டு மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், முதல் இடம், 2-ம் இடம், 3-ம் இடம் என அறிவிக்கப்படுவதில்லை. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அவர்களுக்கு தனித்தனியாக செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் இணையதளத்திலும் பார்த்துக்கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலிலும் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் பிளஸ்-2 தேர்வில் 91.58 சதவீதம் தேர்ச்சி பெற்று 31-வது இடத்தை பிடித்தது.