வீட்டில் பதுக்கி வைத்திருந்த 96 மதுபான பாட்டில்கள் பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 96 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
x

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 96 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

மயிலாடுதுறை

திருவெண்காடு

நாகை மண்டல டாஸ்மாக் மேலாளர் வாசுதேவன், உதவி மேலாளர் சங்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேற்று திருவெண்காடு அருகே மேலமூவர் கரை சுனாமி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி முருகேஸ்வரி (வயது 50) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி சாராய பாக்கெட் மற்றும் 96 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட், மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story