980 கிலோ மின்னணு கழிவுகள் சேகரிப்பு


980 கிலோ மின்னணு கழிவுகள் சேகரிப்பு
x
திருப்பூர்

980 கிலோ மின்னணு கழிவுகள் சேகரிப்பு

திருப்பூர் மாநகராட்சி மற்றும் துப்புரவாளன் அமைப்பு சார்பில் மின்னணு கழிவு சேகரிக்கும் முகாம் திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. ஆணையாளர் கிராந்திகுமார் பாடி முகாமை தொடங்கிவைத்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

திருப்பூர் பகுதியில் உள்ள பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உபயோகப்படுத்திய கழிவு செய்யப்பட்ட மின்சாதனங்களை கொடுத்து தூய்மையான திருப்பூராக மாற்ற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.

விருக்‌ஷா, ஸ்ரீசாய் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் அவர்கள் பயன்படுத்திய 200 கிலோ மின்னணு கழிவுகளை கொடுத்து அதற்கு ஏற்ற தொகையை பெற்றுக்கொண்டனர். மொத்தம் 980 கிலோ மின்னணு கழிவுகள் பெறப்பட்டு ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த கழிவுகளை சென்னை மற்றும் பெங்களூருவுக்கு கொண்டு சென்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் அவை அப்புறப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story